மாண்டிசோரி கல்வி முறை

குழந்தைகளுக்கான பள்ளிகளில் மாண்டிசோரி பள்ளிகள் ஒரு வகை. 1907 இல் இத்தாலி நாட்டைச் சேர்ந்த மாண்டிசோரி அம்மையாரால் இம்முறை வகுக்கப்பட்டது. உலகில் பல நாடுகளில் மாண்டிசோரி முறைப் பள்ளிகள் உள்ளன. விளையாட்டு மூலமே எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கையே இதன் அடிப்படையாகும்.

மாண்டிசோரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சுதந்திரம் உண்டு. பல குழந்தைகள் சேர்ந்து கூட்டுறவு மனப்பான்மையை இங்கு பெறுகின்றனர். பல குழந்தைகளுக்கிடையில் ஒவ்வொரு குழந்தையும் தனக்குத் தானே ஆசிரியராக விளங்குகிறது. மாண்டிசோரிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழிகாட்டவும், கண்காணிக்கவுமே ஆசிரியர்கள் இருப்பார்கள்.

மாண்டிசோரிப் பள்ளிகளில் பலவகைப் பயிற்சிக் கருவிகள் உள்ளன. இக்கருவிகள் விளையாட்டு சாமான்கள் போலக் கண்ணைக் கவரும் வகையில் பல வண்ணங்களில் இருக்கும். இக்கருவிகளின் மூலம் ஆசிரியரின் உதவி இல்லாமலேயே குழந்தைகள் பலவற்றைக் கற்று உணர்ந்து கொள்ள முடியும். பிற்காலத்தில் எழுதவும், படிக்கவும், வரையவும் கற்றுக் கொள்வதற்கான பயிற்சியைக் குழந்தைகள் இக்கருவிகளின் வாயிலாகப் பெற்றுவிடுகின்றனர். கணிதம், பூகோளம், உயிரியல் முதலிய பல துறைகளுக்கேற்றவாறு பலவகைக் கருவிகள் இம்முறையில் உள்ளன.

1 கருத்து:

  1. Dear Sir/Madam,
    what is the procedure for opening and running of a montessorri based school? To whom and where have to apply? kindly guide me. Thanking you. R. Rajaguru. rajavarth@gmail.com Cell : 9659347114.

    பதிலளிநீக்கு